Main Menu

புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கு கமல் ஆதரவு

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கு உடன்பாடு உண்டு என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியினரின் கல்வி மேம்பாட்டிற்காக சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பல வருடங்களாக உதவி செய்து வருகிறனர். எனவே கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவுக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கைகுறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் ‘வரைவு அறிக்கை’ மீது கருத்து தெரிவித்த சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. சூர்யாவுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக இருக்கும்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகரும் சிவக்குமாரின் மகனுமான சூர்யா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய அவர், “மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிப்பார்கள்.

இதற்கு அமைதியாக இருந்தால் இந்த கல்விக் கொள்கை நிச்சயம் திணிக்கப்படும். இதனால் புதிய கல்விக் கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என்று சூரியா பேசினார்.

இதற்கு பெரும்பாலான ஆளும் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் சூர்யாவின் கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்தார்.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்கமல்ஹாசன், சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...