Main Menu

உலக சாதனை படைத்த மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘மைக்கல்’, உலகளவில் 977 மில்லியன் டொலர்களை வசூலித்து, வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த Biopic திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம், பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தின் சாதனையை இது முறியடித்துள்ளது.

‘பொஹிமியன் ரெப்சோடி’ திரைப்படத்தை முறியடித்து ஏற்கனவே அதிக வசூல் செய்த இசைப் படமாக மாறியிருந்த ‘மைக்கல்’, தற்போது ஒட்டுமொத்த பயோபிக் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அத்துடன் இது லயன்ஸ் கேட் (Lionsgate) நிறுவனத்தின் மிக வெற்றிகரமான திரைப்படமாகும்.

அந்துவான் ஃபுகுவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், மைக்கல் ஜெக்சனின் சொந்த மருமகனான ஜாபர் ஜெக்சன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், மைக்கல் ஜெக்சன் மீதான குற்றச்சாட்டுகளைப் பேச மறுத்து, உண்மைகளை மறைத்த சுத்திகரிக்கப்பட்ட கதையாக இது உள்ளதாக விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, உலகளவில் ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் தளங்களில் மைக்கல் ஜெக்சனின் பாடல்களைக் கேட்போரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.