Day: February 26, 2021
தமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப் பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது!
தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென இன்றைய கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், விரைவில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கட்டமைப்பு உருவாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடியமேலும் படிக்க...
ஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு!
சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்மேலும் படிக்க...
இலங்கைக்கு இது மிக முக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு
வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது என அவர்மேலும் படிக்க...
இலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப்மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் இம்ரான் கான், தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
பிரித்தானியா இரட்டை வேடம் போடுவதாக பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு
தமது நாட்டு இராணுவ வீரர்களை, எந்தவொரு யுத்தக் குற்ற நீதிமன்றங்களிலும் நிறுத்தப் போவதில்லையெனக் கூறும் பிரித்தானியா, எமது நாட்டு இராணுவ வீரர்கள் குறித்து ஏன் சிந்திப்பதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில்மேலும் படிக்க...
அர்மீனியாவில் அரசாங்கத்தை கவிழ்க்க இராணுவம் முயற்சி: பிரதமர் பாஷின்யன் பரபரப்பு குற்றச்சாட்டு!
அர்மீனியாவில் தனது தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் முயற்சிப்பதாக அந்த நாட்டு பிரதமர் நிகோல் பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளார். நகோர்னா-கராபக் பிராந்தியத்தில் அசர்பைஜானுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் அர்மீனியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்துமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் கூகுள்- முகப்புத்தகம் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்!
செய்திகளைப் பகிர்வதற்காக கூகுள், முகப்புத்தகம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அவுஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. பிற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பகிரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை அந்த ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதைக் கட்டாயமாக்கும்மேலும் படிக்க...
வறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பெருமிதம்!
வறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங், பெருமிதமாக தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த 40ஆண்டுகளாக வறுமையில் பாதிக்கப்பட்டிருந்த 77 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு, வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழுமையான வெற்றியை அடைந்துள்ளது. இதுகுறித்து ஷிமேலும் படிக்க...
தன்னிகரற்ற சொற் பொழிவாளர் – தா. பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்!
தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். தம் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காக ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்ட தோழர் தா.பா.வின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என வைகோமேலும் படிக்க...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்!
தமிழகம், சென்னை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலைமேலும் படிக்க...
இலங்கையில் தயாரிக்கப் பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம்!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரித்துள்ள, வைரஸ்களை அழிக்கக் கூடிய இந்த முகக் கவசம், நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அறிமுகம்மேலும் படிக்க...
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும் – சிறீதரன்
ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நெருக்கமாக இருப்பவரும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைந்து எமக்காக அதே கம்பீரத்துடன் மீள குரல் கொடுக்கவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கொரோனா தொற்றால்மேலும் படிக்க...
பிள்ளைகளைக் காட்டி விட்டு வந்து பேசினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்- உறவுகள் தெரிவிப்பு!
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, காணாமலாக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...