ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்கு வரத்துக்காக ஒரு வழிப் பாதையாக திறப்பு
ஹட்டன், வூட்லண்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இன்று அதிகாலை முதல் தடைப்பட்டிருந்தது ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. வீதியை முழுமையாக வழமைக்கு கொண்டுவரும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய மலைநாட்டிற்கு இன்றும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மேலும் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மண் மேடுகள் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மலைநாட்டு வீதிகளில் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை சீரற்ற காலை காரணமாக நேற்றும் இன்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான கல்வி செயலாளர் தெரிவித்தார் இதேவேளை பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் பாடசாலையின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்
