Main Menu

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது.

போர்த்துகல், பெல்ஜியம் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அதிகாரிகளின் உதவியுடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வதேச விசாரணையை பொலிஸார் ஆரம்பித்தனர்.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பல்வேறு நாடுகளில் உள்ள 179 வீடுகளில் தேடல்களை மேற்கொண்டனர் என்றும் இது கைது செய்ய வழிவகுத்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் அடிப்படையில் பிரேசிலில் முப்பத்தெட்டு பேரும், பெல்ஜியத்தில் நான்கு பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு பேரும், ஸ்பெயினில் ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 45 டன் கொகோயின் முக்கிய ஐரோப்பிய துறைமுகங்களுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...