Day: November 29, 2020
காவல்துறையினர் பலர் காயம்! – ஆர்ப்பாட்டத்தில் வன்முறை
நேற்றைய தினம் பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலத்த வன்முறை வெடித்தது. Place de la Bastille பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 46,000 வரையானவர்கள் கலந்துகொண்டனர். காவல்துறையினருக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள Global security எனும் புதிய சட்டத்தை கண்டித்துமேலும் படிக்க...
பிரெக்சிற் பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்!
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நேற்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு முடிவடைவதற்குள் இன்னும் ஐந்து வாரங்கள் காணப்படும் நிலையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான கடைசி முயற்சியாக இந்தமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை!
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் நால்வரை படுகொலை செய்த நபர்களை தேடும் பணிகளை அந் நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சுலவேசி தீவில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய பத்து தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் தலையைமேலும் படிக்க...
பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது
பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல், பெல்ஜியம் மற்றும் பிரேசில் ஆகியமேலும் படிக்க...
மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்
மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப்மேலும் படிக்க...
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை, மேலும் படிக்க...
அஜித் டோவலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாலை, ஜனாதிபதி செயலகத்திலேயே இருவருக்கும் இடையில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல்,மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர், உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 109பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர், 10 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். நான்கு பேர், 31 முதல்மேலும் படிக்க...
பி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார் பிரதமர்?
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவியான சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “பிரதமரும் அவரது மனைவியும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்குமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தை முடக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதா? – கேதீஸ்வரன் விளக்கம்
யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடையத்மேலும் படிக்க...