Main Menu

பிரெக்சிற் பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்!

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நேற்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு முடிவடைவதற்குள் இன்னும் ஐந்து வாரங்கள் காணப்படும் நிலையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான கடைசி முயற்சியாக இந்த பேச்சுவாத்தை இடம்பெறுகின்றது.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தைக்கான எந்த அழைப்பும் வரவில்லை என இங்கிலாந்து வட்டாரங்களை மேற்கோளிட்டு ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த 48 மணி நேரத்தில் இவர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையாளர் மைக்கல் பார்னியர் பிரிட்டனுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாகவும் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கையையும் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

பகிரவும்...