Main Menu

காவல்துறையினர் பலர் காயம்! – ஆர்ப்பாட்டத்தில் வன்முறை

நேற்றைய தினம் பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலத்த வன்முறை வெடித்தது.  Place de la Bastille பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 46,000 வரையானவர்கள் கலந்துகொண்டனர். காவல்துறையினருக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள Global security எனும் புதிய சட்டத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.  எல்லோரும் காவல்துறையினரை வெறுக்கின்றனர்! என ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். முதலில் அமைதியாக ஆரம்பித்த இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. Place de la Bastille  இற்கு அருகே உள்ள Rue du Pasteur Wagner வீதியில் (11 ஆம் வட்டாரம்) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. காவல்துறையினர் பலமாக தாக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கினார்கள்.  இதில் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 27 பேர் காயமடைந்திருந்தனர். நாள் முடிவில் 46 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 27 பேர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, 46,000 பேர் பரிசிலும்,மொத்தமாக நாடுமுழுவதும் 133,000 பேரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...