Main Menu

பிரித்தானியாவில் ஒகஸ்ட் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி!

பிரித்தானியாவில் ஒகஸ்ட் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.

ஈட் அவுட் டு ஹெல்ப் அவுட் திட்டத்தினை அறிவித்து அரசாங்கம் உதவி செய்த போதிலும், இந்த வளர்ச்சி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவான வளர்ச்சியை விட குறைவானது.

அதேவேளை, இது நகர பொருளாதார வல்லுநர்களிடையே 4.6 சதவீத மாத வளர்ச்சி வீதத்திற்கான எதிர்பார்ப்புகளை குறைத்துவிட்டது. பொருளாதாரம் தொற்றுநோயைத் தாக்கும் முன் இருந்ததை விட 9.2 சதவீதம் குறைவானது.

ஜூன் மாதத்தில், பொருளாதாரம் 8.7 சதவீதம் மற்றும் ஜூலை மாதத்தில் 6.6 சதவீதம் வளர்ச்சியடைந்தது.

புதிய கொவிட் கட்டுப்பாடுகள், ஒக்டோபரில் ஃபர்லோ திட்டத்தின் முடிவு மற்றும் ஒப்பந்தம் இல்லாத ப்ரெக்ஸிட் குறித்த கவலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் வளர்ச்சி மேலும் குறைந்து காணக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பகிரவும்...