Main Menu

லியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு!

பிரான்ஸ் நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் சாட்சிய விசாரணைகளை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு கூறியதுடன், இப்பகுதியைத் தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக அறிவிக்கப்படாத போதிலும் கொலை முயற்சி தொடர்பான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த கொலைகளை “இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்” என கூறினார்.

அத்தோடு வழிபாட்டுத் தலங்கள் உட்பட பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினரையும் அனுப்பினார்.

பகிரவும்...