Main Menu

ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை – பிரதமர் கண்டனம்

ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள நகரங்களில் தொடர்ச்சியான வன்முறை போராட்டங்களை ஸ்பெயினின் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பொறுப்பு, ஒற்றுமை மற்றும் தியாகத்திலிருந்து மட்டுமே எல்லா நாடுகளையும் பேரழிவிற்கு உட்படுத்தும் தொற்றுநோயை தோற்கடிக்க முடியும். சிறுபான்மை குழுக்களின் வன்முறை மற்றும் பகுத்தறிவற்ற நடத்தை தாங்க முடியாதது. அது வழி அல்ல” என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தொடங்கியதையடுத்து அங்கு 6 மாத காலத்திற்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்ரிட் நகரில் கூடிய போராட்டக்காரர்கள், வீதிகளில் இருந்த குப்பைத்தொட்டிகளுக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற பொலிஸார் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பகிரவும்...