Main Menu

பிரான்ஸில் ஒருமாதத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்திற்கு முதல் வெற்றி!

பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

ஓய்வூதிய சீர் திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர்கள் கோரிக்கையாய் வைத்துள்ள நிலையில், அரசு முதல்கட்டமாக வயது வரம்பு தொடர்பான பிரச்சனைக்கு மட்டும் தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளது.

இதற்கமைய 62 வயதில் இருந்து 64 வயதாக மாற்றப்பட்ட ஓய்வூதிய காலத்தை, மீண்டும் 62 வயதாகவே மாற்றியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் எத்துவார் பிலிப் கூறுகையில், ‘வேலை நிறுத்தம் ஆரம்பித்து இன்று 40 நாட்கள் ஆன நிலையில், அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. நான் குறுகிய கால நடவடிக்கையாக, கோரிக்கையின் ஒரு பகுதிக்கு தயாராகிறேன்.

அதற்கான பொறுப்பை நான் ஏற்கின்றேன். குறைந்தது 2027ஆம் ஆண்டு வரையான காலத்திற்கு இந்த வயது வரம்பு குறைப்பு தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவந்ததால், தற்போது ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்துள்ளது.

இதனால் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, கடந்த 5ஆம் திகதி முதல் பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொலிஸார், விமானநிலைய ஊழியர்கள் என பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

பகிரவும்...