Main Menu

பின்லாந்தில் நான்கு நாட்கள் மட்டும் தான் வேலை என்ற செய்தி பொய்யானது!

பின்லாந்தில் தொழிலாளர்கள் நான்கு நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதுமானது என, அந்நாட்டின் பிரதமரும், உலகின் இளம் பிரதமரான சன்னா மரீன் அறிவித்ததாக வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, சன்னா மரீன் அரசின் ஒரு குழு விவாதத்தில் இந்த யோசனையை சுருக்கமாக முன்வைத்தார், ஆனால் அவர் பிரதமரான பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என பின்லாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையுடன் 34 வயதான சன்னா மரீன் பின்லாந்தின் பிரதமராக பதவி ஏற்றார்.

இதற்கிடையே, பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள 3 நாட்கள் விடுமுறை, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் சன்னா மரீன் வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் உண்மைக்கு புறம்பான இந்த செய்தியை, கடந்த 2ஆம் திகதி பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த பிரபல செய்தி நிறுவனமொன்று முதல்முறையாக வெளியிடப்பட்டது.

பகிரவும்...