Main Menu

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜாக் ஷிராக் மறைவு

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜாக் ஷிராக் (Jacques Chirac) அவர்கள் தனது 86 வது வயதில் இன்று காலை காலமானார்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலான அரசியல் வாழ்க்கை அனுபவம் மிக்க ஜாக் ஷிராக் அவர்கள் 1995 மே மாதம் முதல் 2007ம் ஆண்டு மே மாதம் வரை பிரான்சின் ஜனாதிபதியாகவும், அதேவேளை பிரான்சின் பிரதமராக இரு தடவைகளும் (1974 – 1976 வரை , 1986 – 1988 ம் ஆண்டு வரை) , மற்றும் மூன்று தடவை பாரிஸ் மாநகர முதல்வராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி அவர்கள் இன்று காலை காலமானார்.

அவரது மறைவையொட்டி பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜாக் ஷிராக் அவர்கள் 23ம் திகதி நவம்பர் மாதம் 1932ம் ஆண்டு பாரிஸின் 5ம் வட்டாரத்தில் பிறந்தார்.

பகிரவும்...