Main Menu

பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் 100 சிறிய கடைகள் அகற்றம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் மாமல்லபுரத்தில் உள்ள 100 சிறிய கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியும் சீன அதிபரும் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வருகிறார்கள்.

இவர்கள் சுற்றிபார்க்க இருக்கும் அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதிகளின் சாலையோரம் 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பெட்டிக்கடை, கூல்ரிங்ஸ், சங்கு வியாபாரம், பூக்கடை, பழக்கடை, டீ, டிபன், சாப்பாடு, இளநீர் என பலவகை கடைகளை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 21-ந் தேதி மாமல்லபுரம் வந்த தலைமை செயலர் சண்முகம் அந்த கடைகளை அகற்றி சுத்தப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அக்கடைகளை 3 நாட்களுக்குள் அகற்றும்படி கடை நடத்துவோருக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி இன்று அனைவரும் கடைகளை அகற்றினர். அடுத்த மாதம் 13-ந் தேதி வரை கடைகள் வைக்ககூடாது எனவும் பேரூராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் 20 நாட்கள் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி தண்டல் கடன் எப்படி கட்டுவது குடும்ப செலவுக்கு என்ன செய்வது என அப்பகுதி வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

பகிரவும்...