Main Menu

பிணையில் விடுதலையானார் நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி பிணையில் விடுதலையாகியுள்ளார்.

நளினிக்கு அவரது தாயார் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் பிணை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு பிணையில் வரும் அவர், வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்கவுள்ளதாகவும் இது குறித்த ஆவணங்களை நளினி கையளித்துள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

நிபந்தனைகளுடன் வெளியில் வருகிறார் நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி பிணையில் விடுதலையாகிறார்.

அவர் இன்று (வியாழக்கிழமை) வெளிவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அவர் காலை 8.30 மணியளவில் வெளியில் வரவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இவ்வாறு வெளியில் வரும் நளினி, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்றும் ஊடகங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நளினியின் பிணையை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்குமாறு அரசிடம் கோரவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மகளின் திருமணத்திற்காக ஆறு மாதங்கள் பிணைக்கோரி நளினி வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு ஒருமாதம் பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி அவர் பிணையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. நிலையில் அவர் இன்று வெளியில் வரவுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...