Main Menu

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

5.3 ரிக்டர் அளவில் சிபா பகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அண்மைக்காலமாக இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...