Main Menu

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான அறிவித்தலை வெளியிட்டது மத்திய அரசு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாடலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடலைகள் மீளத்திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிக்காட்டல் நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி பாடசாலைகளை திறப்பதற்கு முன்பாக அனைத்து பகுதிகளும் முழுமையாக  சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக வேறு முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிராத்தனை கூட்டங்கள், விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீச்சல் குளத்தை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடலையில் நுழைவு வாயில் தொற்றுநீக்கும் திறவம், உடல் வெப்பநிலை பரிசோதனை போன்றவற்றை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவர்கள் தங்கள் பொருட்களை பிற மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூடாது என்பதுடன், கட்டாயம் முகக்கவசம் அணியுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...