Main Menu

பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் அதிகரிப்பு

பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

இதனால், வதந்திகளுக்கும், போலிப் பிரசாரங்களுக்கும் ஏமாறாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம் கோரிக்கை வித்துள்ளார்.. 

வடக்கு, ஊவா மாகாணங்களில் மாணவர்களின் வருகை 70 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கொழும்பின் பிரதான பாடசாலைகளை தவிர, ஏனைய பாடசாலைகளில் மாணவர்களின் வருகை போதிய அளவில் காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். 

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 55 சதவீதத்தைத் தாண்டுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஸாம் தெரிவித்துள்ளார். பிரதேச பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 70 சதவீதத்தை எட்டியிருப்பதாக மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளர். 

கொழும்பு மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கத்தோலிக்க பாடசாலைகள் ,பாடசாலை அதிபர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து இடம்பெறும் என பாடசாலைகளின் முகாமையாளர் அருட்தந்தை ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். 

பகிரவும்...