Main Menu

பழங்குடிப் பெண்மணியை வெளிவிவகார அமைச்சராக்கிய ஜெசிந்தா ஆர்டன்

நியூசிலாந்தின் முதல் பழங்குடியினப் பெண் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார்.

உலகின் அதி பன்மைத்துவ நாடாளுமன்றை உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இன்று குறித்த நியமனத்தை வழங்கினார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் முதல் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான மயோரி பழங்குடியினத்தை சேர்ந்த நனையாஹ் மஹூட்டா எனும் பெண்மணிக்கே குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த வின்ஸ்டன் பீட்டர்ஸும் மயோரி இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் குறித்த பழங்குடியினத்தை சேர்ந்த பெண்மணிக்கு இவ்வமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்தின் ஊடகம் ஒன்றுக்கு தனது பதவி குறித்து கருத்து வெளியிட்டுள்ள மஹூட்டா, வெளிவிவகார விடயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகிப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பான சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...