Main Menu

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தென்கொரியாவில் மீண்டும் பாடசாலைகள் திறப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டப்பட்ட தென்கொரியாவில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் தென்கொரியா, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (புதன்கிழமை) பாடசாலைகளை மீண்டும் திறந்தன.

வழமைபோல் அல்லாது வகுப்பறைகள் மற்றும் சிற்றூண்டி சாலைகளில் பிளாஸ்டிக் திரைகள் போடப்பட்டு மாணவர்களின் இடைவெளி பேணப்படுகின்றது.

இதன்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாணவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பாடசாலை வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு, மாணவர்கள், வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும், பக்டீரியா எதிர்ப்பு ஜெல் மூலம் கைகளை கழுவ வேண்டும், முகமூடியை அணிந்து கைகுலுக்காமல் இருக்க வேண்டும், மாணவர்கள் ஒருவருக்கொருவர் எதிரே உட்கார முடியாது. ஒரு முழுமையான பாதைக்கு அருகில் யாரும் இறுதி இருக்கையில் அமர முடியாது. தண்ணீர் அல்லது உணவை யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது. நடக்கும் போது மூன்று அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

தென்கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11,122பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 264பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...