Main Menu

கொவிட்-19 தொற்றிற்கு எதிரான மருத்துவத் தயாரிப்பில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளது: ஐரோப்பிய ஆணையம்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிற்கு எதிரான மருத்துவத் தயாரிப்பில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளதாக, ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன.

ஆனால், இந்த விடயத்தில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளதாக, புரூக்செல்சில் உள்ள, ஐரோப்பிய ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிற்குப் பின்னராக, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவச் செயற்திறனை வலுப்படுத்தல் நடவடிக்கையில் பிரான்ஸ் உடனடியாக களமிறங்கவேண்டும் எனவும் ஐரோப்பிய ஆணயம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கைக்குப் பிரதமரும், ஜனாதிபதியும் எந்த விதமாக பதிலையும் அளிக்கவில்லை.

பகிரவும்...