Main Menu

பயணிகள் தப்பி ஓடியமையால் ஸ்பானிஷ் விமான நிலையம் மூடல்

புலம்பெயர் பயணிகள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவத்தை அடுத்து ஸ்பெயினின் விமான நிலையம் ஒன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூடப்பட்டது.

மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுகொண்டிருந்த கொண்டிருந்த விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக பால்மா டி மல்லோர்காவிற்கு திருப்பி விடப்பட்டது.

குறித்த விமானம் தரையிறங்கியதும், 21 பயணிகள் ஓடுபாதையின் குறுக்கே ஓடி, சுற்றுச்சுவர் வேலிக்கு மேல் பாய்ந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.

இருப்பினும் பொலிஸார் அவர்களை கைது செய்த நிலையில் அவர்கள் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தில் இருந்து இந்த குழு தப்பிக்க முயற்சி செய்தமை தன்னிச்சையானதா அல்லது சட்டவிரோதமாக குடியேறுவதற்கான சதியா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

பகிரவும்...