Main Menu

பத்து வருடங்களில் வடகிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் – இன்பராசா

விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த வடகிழக்கை அரசியல் அங்கிகாரத்துடன் புலிகள்தான் ஆளவேண்டும். அது விரைவில் நடக்கும் என்று புணர்வாழ்வு அழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறுக்காலபோன போராளிகள் என்ற வார்த்தையை சொல்லியிருந்தால் அதனை நாம் மறுதலிக்கின்றோம்.

போராளிகளிற்கு ஒரு பலமான கட்டமைப்பு இருந்தால் நாம் குறுக்கே போகாமல், நேராக பயணிப்போம். எமக்கு ஒரு கட்டமைப்பு இல்லாததன் காரணத்தினாலேயே போராளிகள் குறுக்கே திரிகின்றார்கள்.

அதுபோல யாருடன் பயணித்தாலும் எமது போராளிகள் அரசியல்வாதிகளைபோல தலையாட்டிக்கொண்டு பயணித்தால் எமக்கும் அவர்களிற்கும் வித்தியாசம் இல்லாமல்போய்விடும். எனவே போராளிகள் தமது தற்துணிவை பயன்படுத்தவேண்டும்.

கூட்டடைப்பு எம்மை பலவீனமாக நினைக்கின்றது. ஆனால் இன்னும் 5, 10 வருடங்களில் நாங்கள் தான் பலமாக வரப்போகின்றோம்.

விடுதலைப்புலிகள் ஆட்சிசெய்த வடகிழக்கை புலிகள்தான் அரசியல் அங்கிகாரத்துடன் ஆளவேண்டும். அதனை நாம் உருவாக்குவோம் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்வதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அடையாளம் இல்லாத நிலைக்கு நாம் தள்ளிவிடுவோம். அந்தளவுக்கு நாம் வேலை செய்வோம்” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...