Main Menu

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியில் இந்திய கடனுதவியின் கீழ் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து பொருட்களை சந்தைக்கு விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களில் சுமார் 50 வீதமானவை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...