Main Menu

நேட்டோவில் உத்தியோக பூர்வமாக இணைந்தது சுவீடன்

நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து  கொண்டது. நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும். 

நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது. 

எனினும், நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும் ஹங்கேரியும் தயங்கிவந்தன. 

பின்னர் இவ்விரு நாடுகளும் தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், நேட்டோவில் சுவீடன் இணைந்துகொண்டது.

நேட்Nhவில்  சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள சுவீடன் பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி என கூறியுள்ளார்.  

பகிரவும்...