Main Menu

நாட்­­டையும், மக்­க­ளையும் நன்கு அறிந்­த­வரே சஜித் பிரே­ம­தாச : திஸ்ஸ அத்­த ­நா­யக்க

நாட்­­டையும் அந்நாட்டு மக்­க­ளையும் நன்கு அறிந்­த­வரே  சஜித் பிரே­ம­தாச. அவர் எதிர்­வரும் ஜனா­தி­ப­தி­யாகத் தேர்­தலில் வெற்­றிப்­பெற்றால், பத்து இலட்­சத்­துக்கும் குறை­வான கடன் பெற்று அதனை உரிய காலத்­திற்குள் திருப்பி செலுத்த முடி­யாமல் கடன் பற்­றிய தகவல் பணி­ய­கத்தின் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­வர்கள் அதி­லி­ருந்து விடு­பட அவர்களுக்கு மேலும் ஒரு­ வ­ருடம் கால அவ­காசம் வழங்­கப்­படும் என்று ஐ.தே.கவின் முன்னாள் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த ­நா­யக்க தெரி­வித்தார்.  

இதன் மூலம் கடன் பிரச்­சி­னையால் வாழ்க்­கையில் முன்­னேற முடி­யா­ம­லி­ருப்­ப­வர்கள் மீண்­டெ­ழு­வ­தற்கு  வாய்ப்­ப­ளிக்­கப்­படும்.  இவ்­வாறு மக்­களின் தேவை­யையும் அவர்­க­ளது நிலைப்­பாட்­டையும் அறிந்து செயற்­படும் தலை­வரே அடுத்த ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரி­வித்த போதே இதனைத் தெரி­வித்தார். அங்கு  அவர் மேலும் கூறி­ய­தா­வது:

 தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள். எனினும் அவற்றில் குறிப்­பி­டப்­ப­டாத முக்­கிய அம்சம் ஒன்று சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அதா­வது பத்து இலட்­சத்­துக்கும் குறைந்த கடன் பெற்று அதனை மீள் செலுத்த முடி­யா­ம­லி­ருப்­ப­வர்கள் கடன் பற்­றிய தகவல் பணி­ய­கத்தின் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். அவ்­வாறு குறித்த பட்­டி­ய­லுக்குள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை அதி­லி­ருந்து ஒரு வரு­டத்­திற்குள் விடு­விப்­ப­தாக சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­தி­ருக்­கிறார்.

பெண்கள் மற்றும் சிறு உற்­பத்­தி­யா­ளர்கள் என ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் இவ்­வாறு கடன் பெற்று அதனை மீள் செலுத்த முடி­யாமல் உள்­ளனர். அவர்­க­ளுக்கு மேலும் ஒரு வருட கால அவ­காசம் வழங்கி அதி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

மேலும் பொருட்கள் மற்றும் சேவை கள் மீதான மறை­முக வரிச்­சுமை தொடர்­பிலும் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்ளது. இதன் மூலம் மக்­களின் வாழ்க்கைச் செலவு அதி­க­ரிக்­கின்­றது. எமது உற்­பத்­தி­க­ளி­லி­ருந்து நூற்­றுக்கு எண்­பது வீதம் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான மறை­முக வரி அற­வி­டப்­ப­டு­கி­றது. நூற்­றுக்கு 60 வீத­மாகக் குறைப்­ப­தாக கொள்கை ரீதி­யாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்­ப­தற்கு பிர­தான காரணம் மறை­முக வரி அற­வி­டப்­ப­டு­கின்­ற­மையே ஆகும். சீனி மற்றும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களில் மறை­முக வரி தாக்கம் செலுத்­து­கி­றது. இதனை நூற்­றுக்கு 20 வீதத்தில் குறைப்­பதன் மூலம் மக்­க­ளுக்கு சலு­கையை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று சஜித் தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறி­யி­ருக்­கிறார்.

அத்­தோடு மேலும் வெளி­நாட்டு வரு­மான வரியை நீக்­கு­வது தொடர் பில் குறிப்­பி­டப்­பட்­டுள்ளது. நூற்­றுக்கு இரண்­டரை வீதம் வட்வரியை குறைப்­ப­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார். இதன் மூலம் 15 வீத வட்வரி, பன்னிரண்டரை வீதமாகக் குறை வடையும். இதேபோன்று மேலும் பல முக்கிய விடயங் கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வ தற்கு தேசிய ரீதியிலான பார்வை அவசிய மாகும். அத்தோடு நாட்டு மக்களின் நிலைப்பாடும் முக்கியத்துவமுடையதாகும். இவற் றை ஆராய்ந்தே சஜித் பிரேமதாச தனது யோசனைகளை முன்வைத்திருக்கிறார்.

பகிரவும்...