Main Menu

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் உருவாக்கப்பட உள்ளது – மொட்டு கட்சி

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

“குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தொழிற்சங்கத்தினர் பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மக்களையும், அரசாங்கத்தையும் இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டும் அதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...