Main Menu

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து ரவூப் ஹக்கீமை விலகுமாறு கோரிக்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விலக வேண்டுமென,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறியுள்ளார். 

தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிமுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்  ஒப்பந்தங்களை செய்திருந்ததாக,  கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். 

இதனடிப்படையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இன்றிலிருந்து சரியாக 154 நாட்களுக்குப் பின்னர், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதித், தேர்தலை ஒருபோதும் காலந்தாழ்த்த முடியாது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும  தெரிவித்துள்ளார். 

பகிரவும்...