Main Menu

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – எதிர்க்கட்சி

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

டொலர் நெருக்கடி, எரிவாயு, உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல், நாடாளுமன்றத்தை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது என லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை மூடாமல் கூட்டத் தொடரை நடத்துவதே அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...