ஆனந்த சங்கரி மற்றும் அமைச்சர் விஜிதவிற்கும் இடையில் சந்திப்பு
இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த சங்கரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தனது நீண்டகால அரசியல் அனுபவங்களை தம்முடன் பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் துறையில் அவர் ஏற்படுத்திய முன்னுதாரணங்களையும் ஆற்றிய பங்களிப்புகளையும் பாராட்டி, அவருக்கு நன்றி மிக்க மதிப்பையும் தெரிவித்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
