தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை
தையிட்டி விகாரை போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்திருந்த கூடாரங்களை உடைத்து எறிந்ததாக காட்டி முகநூலில் காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருவதை தொடர்ந்து, வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் நேற்று (01) உதவி பொலிஸ் அத்தியட்சகரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தையிட்டி விகாரை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கொட்டகை பிடிங்கி எறியப்பட்டதாக முகநூலில் வெளியிடப்படும் காணொளி பழைய காணொளி .
நேற்று முன்தினம் எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை.
தையிட்டி விவகாரம் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் நடைபெறுவதனால், கொட்டகைகள் பிடிங்கி எறிவதற்கான சூழ்நிலைகள் ஏற்படாது என்று தெரிவித்தார்.
1891 ஆம் ஆண்டு தையிட்டி காணி 16 ஏக்கர் காணி இருந்ததாகவும் , 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 8.5 ஏக்கர் காணியாக குறைவடைந்து இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டு நில அளவைகள் செய்த ஆவணங்கள் அனைத்தும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காட்டியிருந்தார்.
அவ்வாறான நிலமைகள் காணப்படவில்லை. அந்த காலத்தில் பௌத்த துறவி ஒருவர் மருத்துவம் செய்ததற்காக தமிழர் ஒருவர் அவருக்கு இந்த காணியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
1891 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெள்ளையர்கள் ஆட்சி இருந்தது. எவ்வாறு நடைபெற்றிருக்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.
கடிதத்தை பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், தையிட்டி விகாரை காணி விவகாரம் ஒரு மேசையில் காணி உரிமையாளர்கள், பௌத்த துறவிகள் என அமர்ந்து பேசி தீர்வைக் காண்பது தான் சாலச்சிறந்தது என கூறியிருந்தார்.
விகாராதிபதி இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய கட்டுமாணத்தை கட்டியிருப்பதால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எமது பிரதேசத்தில் இராணுவம் தெரு ஓர கடைகளை கட்டியிருக்கின்றது.
இது தொடர்பாக பிரதேச சபை உத்தியோகத்தர்கள் அறிவித்தால் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அகற்றப்படும்.
22 பௌத்த துறவிகள் 110 கிலோ போதைவஸ்துடன் பிடிபட்ட போது, 3 மகாநாயக்க பீடங்களை அழைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்றால், தையிட்டி விகாரை தொடர்பாக, 30 வருட யுத்தம் நிறைவடைந்தும், இன்று வரை தமது வீடுகளில் வாழ முடியாது.
அநாதரவாக நிற்கின்ற நிலமைக்கு வந்திருக்கின்ற போது, ஏன் இந்த மகாநாயக்க பீடங்களை அழைத்து இந்த காணி விடுவிப்பு தொடர்பாக கதைத்து பிரச்சினைகளுக்கு முடிவு எடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
பவானி வீதியை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை தாம் தான் எடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கூறியிருந்தார்.
பவானி வீதியை விட வேண்டாம் என்று மக்கள் ஒரு நாளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இளங்குமரன் முகத்தை மறைத்தவருக்கு அவருடைய கொண்டை தெரியாமல் போனது தான் பெரிய விடயமாக இருக்கின்றது.
தவிசாளர் அல்ல நாங்கள் தான் விடுவிக்கப் போகிறோம் என்று சொன்னவர். முகத்தை மறைத்தவருக்கு தலையில் இருந்த கொண்டையை மறைக்க மறந்துவிட்டார்.
ஆகையால், மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். என்றார்.
