Main Menu

நாகரிக மனிதன் தோன்றியமை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

ஆபிரிக்க கண்டத்திலுள்ள போட்ஸ்வானா என்ற பகுதியிலேயே நாகரிக மனிதன் தோன்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனித குலம் தோன்றிய வரலாற்றை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ஆய்வின் முடிவில், ஹோமோ சேப்பியன்ஸ் என அழைக்கப்படும் நாகரிக மனிதனின் பூர்வீகம் ஆபிரிக்க கண்டம் என்பதை அவர்கள் உறுதிசெய்தனர்.

எனினும், ஆபிரிக்க கண்டத்தில் எந்த இடத்தில் இருந்து நவீன மனிதன் தோன்றினான் என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து, மனித குல வரலாற்றை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

அவர்கள் தென்னாபிரிக்கா மற்றும் நமீபியாவில் வசிக்கும் கோசேன் எனப்படும் பழங்குடிகளின் மரபணு மாதிரிகளைச் சேகரித்தனர்.

அந்த மரபணு மாதிரிகளுடன் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட மரபணு மாதிரிகளை அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

ஆய்வின் முடிவில், வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள்கள் சுமார் 70 ஆயிரம் ஆண்டுகள் போட்ஸ்வானாவில் வசித்தனர் எனவும், அதன்பிறகு அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர் எனவும் முடிவு செய்துள்ளனர்.

பகிரவும்...