Main Menu

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து முக்கிய ஆஸி வீரர் விலகல்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து, அவுஸ்ரேலியாவின் முக்கிய வீரரொருவர் விலகியுள்ளார்.

அணியின் அதிவேக பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கே, தனது சொந்த காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.

ஸ்டார்க் சகோதரர் பிராண்டன் சிறந்த உயரம் தாண்டுல் வீரராவார். கடந்த வருடம் நடைபெற்ற கோல்ட் கோஸ்ட் பொதுநலவாய போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்களான பில்லி ஸ்டேன்லேக் அல்லது சீன் அப்போட் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிட்செல் ஸ்டார்க் இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நான்கு ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

ஏற்கனவே இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிவ் டை உபாதைக் காரணமாக இத்தொடரிலிருந்து விலகினார் என்பது நினைவிருக்கலாம்.

இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில் கென்பர்ரா மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி 134 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பகிரவும்...