Main Menu

அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெறும் : தமிழக அரசு அறிவிப்பு

காலமான பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘தேனிசை தென்றல்’ தேவாவின் இறுதிக்கிரியைகள் நாளை ( 18) அவரது சொந்த ஊரான ஆற்காட்டில் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காகச் சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், பின்னர் அவரது சொந்த ஊரான ஆற்காட்டிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அங்கு நாளை மதியம் 1 மணி அளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.

திரையுலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைக் கெளரவிக்கும் வகையில், தேவாவின் இறுதிக்கிரியையிற்குத் தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.