Main Menu

தொற்றுக்கு உள்ளாகி இருப்பதை அறியாமல் சமூகத்தில் இருப்பவர்களை இனங்காண வேண்டும் – கரு ஜயசூரிய

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே சமூகத்தில் இருப்பவர்களை விரைவாக இனங்காண வேண்டிய தேவையுள்ளது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அறியாமலேயே துரதிஷ்டவசமாக சிலர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவ்வாறாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை விரைவாக இனங்கண்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய பலர் சமூகத்தில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

தாம் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாத ஒருவர் அதை ஏனையவர்களுக்குப் பரப்புவதிலிருந்து எவ்வாறு விலகியிருக்க முடியும்?

அதேபோன்று மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் அனர்த்த முகாமைத்துவ அடிப்படையிலான முறையான செயற்திட்டமொன்றை அரசாங்கம் பின்பற்றுவது அவசியமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...