Main Menu

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் இல்லை- முதலமைச்சர் பழனிசாமி

தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகு ராஜின் மகன் திருமணம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று நடந்தது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கமல் கூறிய கருத்து தொடர்பாக பேச வேண்டாம் என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக எனது கருத்தை கூற இயலாது.

தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேர்தலுக்கு முன்பாகவே வறட்சி மிகுந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சனை உள்ள பகுதிகளில் கலெக்டர்கள் தலையிட்டு குடிநீர் முறையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நிதியும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக கூறும் துணைவேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு தவறானது.

தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவோர் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முடியாது.

தேர்தல் விதிமுறையை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

பகிரவும்...