Main Menu

தேசிய வளங்களை விற்பனை செய்து எமது நிர்வாணத்தை முழு உலகுக்கும் காட்சிப் படுத்த வேண்டாம் – அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர்

ஆட்சியாளர்கள் அனைத்து விடயங்களையும் அரசியல் மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும். அரச பொறிமுறைகள் தர்மத்துடன் இணைந்து செயற்படும்போதுதான் நாடு செழிப்பாகும் என  அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்தார்.

தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தேசிய பிக்குகள் அமைப்பு வியாழக்கிழமை (14) களனியில் ஏற்பாடு செய்திருந்த மஹா சங்க சம்மேளனத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்து விடயங்களையும் அரசியல்மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும். காலத்துக்கு தேவையான மழை பெய்து விவசாயம் செழிப்புற்று நல்ல அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு  அரச பொறிமுறைகள் தர்மத்துடன் செயற்டவேண்டும்.  நாட்டின் பெறுமதிமிக்க வளங்களை விற்பனை செய்து, அதனை செய்ய முடியாது.

அத்துடன் நாங்கள் அணிந்திருக்கும் ஆடையை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் அவ்வாறு விற்பனை செய்தால் எமது நிர்வாணம் முழு உலகுக்கும் வெளிச்சமாகும். அதனால் எமது மேலான கலாசாரத்தை பாதுகாத்துக்கொள்வதே எமக்கு முக்கியமாகும்.

அத்துடன் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தேசிய குற்றமாகும். அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்ற செய்தியை ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அன்று இலங்கை இந்திய ஒப்பம் செய்துகொள்ளும்போது ஜே.ஆர் போன்ற ஒருவர் இல்லாமல் இருந்தால் எமது நாடு பிளவுபட்டிருக்கும். நாடு பிளவுபடாத வகையில்  நிறைவேற்று ஜனாதிபதி முறையில் சில தடைகளை ஏற்படுத்தி இருந்தார். அதனால் ஆட்சியாளர்கள் எப்போதும் மக்கள் ஆணையின் நோக்கத்துடனே செயற்பட வேண்டும். 

பகிரவும்...