Main Menu

தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிறையில் உயிரை மாய்க்க முயற்சி

தென்கொரியாவில் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டு பின்னர் மார்ஷல் சட்டம் நீக்கப்பட்டமையுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் யன் உயிரை மாய்க்க முயன்றார்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்;ப்பதற்கு முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவை உலுக்கிய மார்ஷல் சட்டத்தின் பின்னர் இவர் ஏனைய உயர் அதிகாரிகள் பலருடன் பதவியை இராஜினாமா செய்தார்.

பின்னர் இவரை அதிகாரிகள் கைதுசெய்தனர் தற்போது கிளர்ச்சி குற்றச்சாட்டுகளிற்காக இவர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையிலேயே அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

பகிரவும்...
0Shares