Main Menu

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

சிரி­யாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தற்­காக, துருக்கி மீது அமெ­ரிக்கா பொரு­ளா­தார தடை விதித்­துள்­ளது. அந்­நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அழிக்க தயா­ராக உள்­ள­தாக  அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.  

சிரி­யாவின் வடக்குப் பகு­தியில் அமெ­ரிக்கப் படைகள் விலக்கிக் கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து அங்கு குர்தீஷ் படை­யினர் மீது துருக்கி போர் தொடுத்­துள்­ளது. குர்தீஷ் படை­யினர் கட்­டுப்­பாட்டில் இருந்த ரக்கா நக­ருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏரா­ள­மான ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

அந்த பகு­தியில் துருக்­கியின் தாக்­கு­தலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐ.எஸ். இயக்­கத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்­தைகள் என 800க்கும் மேற்­பட்ட ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தப்பிச் சென்று விட்­ட­தாக குர்தீஷ் நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில், துருக்­கியின் தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில், அந்­நாடு மீது அமெ­ரிக்கா பொரு­ளா­தார தடை விதித்­துள்­ளது. இது குறித்து ஜனா­தி­பதி  டிரம்ப் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ள­தா­வது, துருக்கி தலை­வர்கள் தொடர்ந்து அழிவு மற்றும் ஆபத்­தான வழியை தேர்வு செய்தால், அந்­நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அழிக்க முழு­மை­யாக தயா­ராக உள்ளேன்.

அமெ­ரிக்கா – துருக்கி இடையே நடக்கும், 100 பில்­லியன்  டொலர் மதிப்பு கொண்ட வர்த்­தக பேச்­சு­வார்த்­தையை நிறுத்தி வைத்­துள்ளேன். தொடர் மனித உரிமை மீறலில் ஈடு­ப­டு­ப­வர்கள், அமைதி ஒப்­பந்­தத்தை மீறி தாக்­குதல் நடத்­து­ப­வர்கள் மீது கூடுதல் தடை விதிக்­கப்­ப­டு­கி­றது எனக்­கூ­றி­யுள்ளார். துருக்கி மீது தடை விதிக்­கப்­ப­டு­வது குறித்து அமெ­ரிக்க பிரதிநிதித்துவ சபை தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், துருக்கி விவகாரம், தேசிய அவசர நிலை என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...