Main Menu

துனிசியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே தற்கொலை குண்டுதாக்குதல்!

வட மேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிஸில், அமெரிக்கத் தூதரகம் அருகே தற்கொலை படைதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

துனிஸ் நகரிஸ் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பெர்கெஸ் டுலாக் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இந்தத் தாக்குதலில், தூதரக பாதுகாவலர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

அவர்களில் ஒரு பயங்கரவாதி அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைய முயன்றதாகவும் அவர்களை பாதுகாவல்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

அதனைத் தொடா்ந்து, மோட்டார். சைக்கிளில் வந்திருந்த மற்றொரு பயங்கரவாதியும், அவரது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக உரிமை கோரப்படவில்லை. எனினும் இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பகிரவும்...