Main Menu

சிங்கப்பூர் மாணவர் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது!

மத்திய லண்டனில் சிங்கப்பூர் மாணவர் மீது இனவாதத் தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 16 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் என்று கூறப்படுகின்றது.

16 வயதுடைய சிறுவன் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், 15 வயதுச் சிறுவன் அடுத்த மாதம் வரை பிணை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 24 ஆம் திகதி ஓக்ஸ்பேர்ட் ஸ்ட்ரீட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஜோனதன் மொக் என்ற 23 வயதான மாணவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மாணவரான அவரை கொரோனா வைரஸ் என்று அழைத்ததுடன் எங்களது நாட்டில் உங்களுடைய கொரோனா வைரஸ் தேவையில்லை என்று கூறிய நான்கு பேர்கொண்ட கும்பல், அவர் மீது தாக்குதல் நடத்தியது.

இந்தச் சம்பவம் ரொட்னம் கோர்ட் ரோட் (Tottenham Court road) ரெயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 24 ஆம் திகதி இரவு 9:15 அளவில் நடந்தது.

இந்தத் தாக்குதலால் தனது வலது கண்ணுக்கு அருகில் உள்ள எலும்பு உடைந்ததாகவும் அறுவைச் சிகிச்சை செய்யப்படவேண்டும் என்றும் ஜோனதன் மொக் தெரிவித்துள்ளார்.

நன்றி bbc.co.uk

பகிரவும்...