Main Menu

தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் – ஹக்கீம்

அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்  கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கில் முஸ்லிம் – தமிழ் தரப்பினருக்கும் எழுந்துள்ள பிரச்சினைகளில் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க நாளை பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் இன்று பிற்பகல் கட்சி தலைமையகமான தாருஸமாலில் கூடியது. கட்சியில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் அங்கத்தவர்கள் கூடி இன்று பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று தேசிய பாதுகாப்பு உறுதிப்பட்டு இருந்தாலும் கூட அவ்வாறு இல்லை என கூறிக்கொண்டு நாட்டினை நாசமாக்க ஒரு சிலர் முயட்சித்து வருகின்றார். தேர்தலை இலக்கு வைத்து சில நாசகார செயல்களை செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பகிரவும்...