Main Menu

இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு!

இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அது கருதப்படுகிறது.

மலர்களை மிக நுணுக்கமாக வரைவதில் வல்லவர் அவர்.

1944ஆம் ஆண்டு நாஸி படைவீரர் ஒருவர் தனது மனைவிக்குப் பரிசளிக்கும் நோக்கில் குறித்த ஓவியத்தைத் திருடிச் சென்றதாய்க் கூறப்பட்டது.

இந்தநிலையில் ஜேர்மனி குறித்த ஓவியத்தை இத்தாலியிடம் திருப்பிக்கொடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பகிரவும்...