Main Menu

தீராத கணித தாகம்.. இறப்பை கூட கணித்த கணித விஞ்ஞானி..!

கணக்கு வரவில்லை எனில் வாழ்க்கையே தப்பாக சென்று விடும் என்கிற அனைத்து ஆசிரியர்களும் நமது பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும்,ஏன் வாழ்க்கை பருவத்திலும் கூட சொல்லிகொடுத்து கொண்டும் இருக்கிறார்கள்.ஆம்,கணிதம் அவ்வளவு முக்கியமானது ஆகும்.

கணக்கு பாடத்தை படிக்காதவன் எங்கையும் நிலைத்திருக்க முடியாது இது தான் இன்றைய வாழ்க்கையின் நிதர்சனம்.கணக்கு மட்டும் தான் வாழ்க்கை என்றால் அப்படி இல்லை,வாழ்க்கையே கணக்கு தான்.ஆம் நாம் அனைவரும் வாழ்க்கை என்ற கணக்கு பாடத்தை படித்தே ஆக வேண்டும்.

பிரபலமான திரைப்படத்தில் பாட்டு ஒன்று எழுதப்பட்டு இருக்கும் “எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோநீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ” என்று தான்… பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்று சொன்ன காலத்தில் பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இருக்கிறது என்று நிருபித்தவர் சீனிவாச ராமானுஜம். ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் சென்னையிலும் வாழ்ந்தவர்.

சிறு வயது முதலே ஏழ்மையிலும்,கணிதத்திலும் இருந்தவர். இன்றைய காலத்தில் கணிதம் என்றாலே சிட்டாய் ஓடும் சிறுவர்களுக்கு மத்தியில் கணிதமே வாழ்க்கை என வாழ்ந்தவர்.

எந்த அளவுக்கு கணக்கு பிடித்து இருந்ததோ அந்த அளவுக்கு வறுமை அவரை பிடித்து இருந்தது நாம் பயன்படுத்தும் ஏடிம் இயந்ததிரத்தின் அடிப்படை சூத்திரத்தை கண்டறிந்தவருக்கு பசி மட்டுமே அவருக்கு துணையாக இருந்தது. 

பள்ளிப்படிப்பை விரும்பாதவர் கணக்கை மட்டும் ஒரு போதும் விடவில்லை. பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்று கூறி கொண்டிருந்த காலத்தில் 0 க்கு வலது பக்கமாக ஒரு இலக்கத்தை இணைத்தால் அதன் மதிப்பு பத்து மடங்கு அதிகரிக்கும். அதுவே இரு பூஜ்ஜியம் போட்டால் இரு மடங்காக உயரும். அவரால் வந்தது தான் நாம் இன்றளவும் பயன்படுத்தும் நுண் கணிதம் (algebra ). மிகப்பெரிய தீர்க்க முடியாத தேற்றங்களையும், சூத்திரங்களையும் தந்தவர் தற்கொலைக்கு முயன்றவர் என்று சொன்னால்  நம்ப முடியுமா…? FA தேர்வில் கணிதம் தவிர அனைத்து தேர்விலும் தோல்வி அடைந்தவர் பிற்காலத்தில் நாம் படிக்கும் தேற்றங்களுக்கு சொந்தக்காரர் ஆனர்.

the man who knew infinity என்ற படமும், fellow of royal society என்ற பட்டமும் உலக அரங்கில் பிரபலமானது.இத்தனைக்கும் பெருமை சேர்த்தவர் தன் மரணத்தை கூட கணக்கு போட்டு வைத்துக்கொண்டு இறந்தார்.

இவரின் பெயரில் விருதும்,கணித சங்கங்களும் உருவாக்கப்பட்டன.அருங்காட்சியகமும் உருவானது. அவர் படித்த பள்ளி, பட்டம் பெறாத கல்லூரி, வேலை பார்த்த துறைமுகம் பல இடங்களில் சிலைகள் இருக்கிறது. அவர் பிறந்த நாளான இன்று தேசிய கணித நாளாக கொண்டாடப்படுகிறது. 

பகிரவும்...