Main Menu

தீபாவளியன்று லண்டனில் ‘இந்திய எதிர்ப்பு பேரணி’ நடத்த திட்டம்: நகர முதல்வர் கடும் கண்டனம்

காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து எதிர்வரும் தீபாவளி தினத்தன்று இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக ‘இந்திய எதிர்ப்பு பேரணி’யொன்ற நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லண்டன் மாநகர முதல்வர் சாதிக் கான் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளார். லண்டன் மக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில் இந்த செயற்பாடு பிளவை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய மத்திய அரசாங்கம் அதிரடியாக ரத்து செய்ததுடன், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு ஒருபக்கம் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்தாலும் மறுபுறம் எதிர்ப்பு போக்கு நிலவுகின்றது.

“எதிர்வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.

லண்டனில் உள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக கூடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேநாளில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்தவுள்ளோம்.

இதில் ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று இந்திய வம்சாவளி லண்டன் சட்டமன்ற உறுப்பினர் நவின் ஷா, மாநகர முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு முதல்வர் கடந்த 18 ஆம் திகதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ‘‘பண்டிகை நாளான தீபாவளி அன்று லண்டன் தூதரகத்திற்கு முன் இந்திய எதிர்ப்பு (Anti-India) பேரணி நடத்த திட்டமிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

லண்டன் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவையிருக்கும் நிலையில், இந்த பேரணி மிகப்பெரிய பிளவு போக்கை ஏற்படுத்தும். இதை ஏற்பாடு செய்தவர்கள் சிந்தித்து அவர்களுடைய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லண்டன் முதல்வர் சாதிக் கான் பதிலளித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்திய சுதந்திர தினத்தின் போது லண்டனில் வாழும் பாகிஸ்தானியர்கள் மற்றும் பிரிவினைவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...