Main Menu

கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று

கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று(திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியில் இருந்து மாலை 7.30 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஆறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

இதன்படி லிபரல் கட்சியின் வேட்பாளர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆண்ட்ரூ ஷீர், நியூ டெமோகிரட்டிக் கட்சியின் தலைவர் ஜக்மித் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

கனடாவில் மொத்தம் 338 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

கடைசியாக, 2015ஆம் நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 184 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.

99 இடங்களுடன் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டாவது இடத்தையும், 44 இடங்களுடன் நியூ டெமாகிரட்டிக் கட்சி மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்முறை 6 கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றதால் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...