Main Menu

பிரான்சில் மாபெரும் தாக்குதல் முன்னெடுக்கப் படலாம்: ஐ.எஸ் தொடர்பில் வெளியான எச்சரிக்கை

சிரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டு ஐ.எஸ் ஆதரவாளர்களை மேலும் ஒடுக்க நினைப்பது ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதி டேவிட் டி பாஸ் எச்சரித்துள்ளார்.

பொதுமக்களின் நலன் கருதி குறித்த நபர்களை சாதாரணமாக இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவத்தினரின் அதிரடி தாக்குதல் காரணமாக, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஜிகாதிகள் உள்பட சுமார் 12,000 ஐ.எஸ் பயங்கரவாதிகள், குர்து ராணுவத்தின் பிடியில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 60 முதல் 70 பிரான்ஸ் நாட்டவர்களும் அவர்களது மனைவியரும் என மொத்தம் 200 பேர் உள்ளதாகவும்.

அவர்களுடன் சுமார் 300 சிறார்களும் குர்து ராணுவத்தின் பிடியில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நிர்வாகம் இதுவரை நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தே வந்துள்ளது.

மட்டுமின்றி, உள்ளூர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படும்படியே வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் ஆதரவற்ற சில சிறார்களை மட்டும் நாடு திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

சிரியாவில் தற்போது எழுந்துள்ள ஆபத்தான சூழலானது, குர்துகளின் பிடியில் இருந்து தப்பும் ஆயிரக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் ஐரோப்பாவுக்குள் ஊடுர காரணமாக அமையும் என பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதி டேவிட் டி பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வந்துள்ள குர்து ராணுவத்தினரின் கவனம் தற்போது துருக்கிய படைகளுக்கு எதிராக திரும்பியுள்ளதால்,

அது ஐ.எஸ் பயங்கரவாதிகளை மீண்டும் குழுக்களாக இணைக்கும் நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்லும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரியா மீது துருக்கிகளின் படையெடுப்பை சாதகமாக பயன்படுத்தி, சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் சிறையில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை மீட்க வேண்டும் என அபுபக்கர் அல் பாக்தாதி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...