Main Menu

திருமணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்த டென்மார்க் பிரதமர்!

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) தனது திருமணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்துள்ளார்.

ஐரோப்பிய வரவுசெலவு திட்டம் மற்றும் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க, கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து முதல் முறையாக ஜூலை 17ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.

இந்தநிலையில், குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தனது திருமணத்தை பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஒத்திவைத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தனது முகப்புத்தகத்தில், ‘இந்த அற்புதமான மனிதரை திருமணம் செய்து கொள்ள நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக அது எளிதாக இருக்கக்கூடாது.

ஜூலை மாதம் சனிக்கிழமையன்று (ஜூலை 18ஆம் திகதி) எங்கள் திருமணத்தை நாங்கள் திட்டமிட்டிருந்தபோது பிரஸ்ஸல்ஸில் சபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அடடா. ஆனால், நான் என் வேலையைச் செய்ய வேண்டும் மற்றும் டென்மார்க்கின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 மீட்பு நிதிக்கான திட்டங்கள் குறித்த உச்சி மாநாடு ஜூலை 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

பகிரவும்...