Main Menu

தாம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் செவி மடுக்கவில்லை – சஜித்

தாம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை என முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வேட்பு மனுவினை தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் அலுவலகத்தின் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்தி அந்த அலுவலகத்தினை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

இன்று நாம் நடாத்தும் இந்த ஊடகச் சந்திப்பு நாம் மறு அறிவித்தல் வரை நடாத்தும் இறுதி ஊடகச் சந்திப்பு என்பதனை கூற விரும்புகின்றேன்.

அரசியல் செயற்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்திய முதலாவது அரசியல் கட்சியாக நாம் இதனைத் செய்துள்ளோம். சிங்கப்பூர் ஒரு நாடு என்ற வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொண்டது.

முன்கூட்டியே கடும் நடவடிக்கை எடுத்தது. ஆகவே சிங்கப்பூருக்கு அந்த இயலுமை கிடைத்தது. சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களையும் மருந்து வகைகளையும் வழங்க வேண்டும்.
தீவிர கண்காணிப்பு பிரிவிலுள்ள கட்டில்களின் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும். கடும் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐந்து வாரங்களுக்கு முன்னராக சர்வதேச தரத்துடன் கூடிய முகக்கவசங்களை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்குமாறு நான் கோரிக்கை முன்வைத்தேன்.

முகக்கவசத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. தேர்தல் பற்றியே கதைத்தனர். இந்த பரிசோதனைகளுக்காக அனைத்து வைத்தியசாலைகளிலும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கான மருந்தை நாட்டில் செயற்படுத்துவதற்கு முன்னராக அமெரிக்காவுடன் கலந்துரையாடி செய்ய வேண்டும். ஐப்பானில் அலிகன் டப்லட் என்ற மருந்துள்ளது.

இத்தகைய முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். தேர்தல் ஆணைக்குழு முதுகெலும்புடன் செயற்பட்டமை தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...